எனக்கு பெண் குழந்தைதான் பிடிக்கும்: நடிகை கரீனா கபூர்!

1kareena-kapoor-187a
பிரபல இந்தி நடிகையும், நடிகர் சாயீஃப் அலிகானின் மனைவியுமான கரீனா கபூர் தற்பொழுது கர்ப்பமாக இருக்கிறார். அவர் எங்கு சென்றாலும் மக்களும் மீடியாக்களும் அவரைப்பார்த்து கேட்கும் ஒரே கேள்வி உங்கள் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதானாம்.
இந்தக் கேள்வி தம்மை ரொம்பவே எரிச்சலூட்டுவதாக சொல்லும் கரீனா, பெண் குழந்தையாக இருந்தால் என்ன? நானும் பெண்தானே! எனக்கு பெண்குழந்தைதான் பிடிக்கும் அதுமட்டுமல்ல ஒரு உயிரைச் சுமந்து பிரசவிக்கும் புனிதமான உரிமை பெண்ணுக்கே உள்ளது என்று மும்பையில் குளோபல் சிட்டிசன் இயக்கம் என்ற அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்பொழுது கரீனா தெரிவித்தார்.
நம் நாட்டில் நிலவும் பெண்களுக்கு எதிரான மனோபாவங்களும் அதன் விளைவாக எழும் கேள்விகளும் தன் மனதை மிகவும் பாதிப்பதாகவும், தனக்கு பிறக்கப்போகும் குழந்தைக்காக மட்டுமல்ல இன்னும் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் நலனுக்காகவும் தாம் இந்த குளோபல் சிட்டிசன் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவதாக கரீனா தெரிவித்தார்.
குளோபல் சிட்டிசன் இயக்கம் இந்தியாவின் அடிமட்டங்களில் காணப்படும் வறுமையை வேரோடு அகற்றுவதை குறிக்கோளாகக் கொண்ட இயக்கமாகும். இந்த இயக்கத்துடன் அமிதாப். அமீர்கான், கரீனா கபூர் போன்ற பாலிவுட் பிரபலங்கள் இணைந்து செயல்படுகிறார்கள்.