வருந்துகிறேன்; எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை: மோகன் சி லாசரஸ் ‘சரண்டர்’

சென்னை:

ல்லா மதத்தினரையும் ஒரே மாதிரி நேசிக்கிறேன். எந்த மதத்தையும் நான் இழிவுபடுத்தி பேசுவதில்லை… இந்துக்களின் மனது புண் பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று, இந்துக்களை சாத்தான்கள் என்று விமர்சித்த நாலுமாவடி கிறிஸ்தவ மத போதகர்   மோகன் சி லாசரஸ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியைச் சேர்ந்தவர் மோகன் சி.லாசரஸ். இவர் சிறுவய தில் இந்து மதத்தில் இருந்த கிறிஸ்தவராக மதம் மாறியவர். பின்னர் தீவிர மத பற்றாளராக மாறி கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார்.

இவர் சமீபத்தில் கிறிஸ்த மத கூட்டம் ஒன்றில் பேசும்போது, இந்து கடல்களை சாத்தான் என்று கூறி விமர்சனம் செய்தார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையாக எதிர்ப்புகளை சந்தித்து. அவரது பேச்சுக்கு இந்த மதத்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இதுகுறித்தது பல மாவட்டங்களில் காவல் துறையிலும் புகார் கொடுக்கப்பட்டது. அதையடுத்து மோகன் சி லாசரஸ் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் பேசியது குறித்து மோகன் சி லாசரஸ் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், “இந்து மதத்தை நான் இழிவுபடுத்தியதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நன்கு அந்த செய்தியை கவனித்துப் பாருங்கள். நான் அங்கு இந்து மதத்தை இழிவுபடுத்தியோ இந்து தெய்வத்தின் பெயரையோ உச்சரிக்கவில்லை. பொது இடத்தில் பேசப்பட்ட காரியம் இல்லை. பொதுமக்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தையும் அல்ல. நான் எந்த பொது இடத்திலும் அப்படி பேசியதில்லை. எந்த பேட்டியிலும் அப்படி சொன்னதில்லை.

இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன்னால். சென்னையில் சில கிறிஸ்தவ ஊழியர்கள் கூடியிருந்தபோது இந்தியாவின் மத நம்பிக்கை, இந்தியாவிலுள்ள மத நம்பிக்கை குறித்து வேதம் சொல்கிற காரியம் அதை குறித்து அவர்கள் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தேன்.

பொது இடத்தில் இன்னொரு மதத்தை குறைத்தோ அவர்களுடைய தெய்வங்களை இழிவுபடுத்தி பேசியது இல்லை. எல்லா மதத்தினரையும் ஒரே மாதிரி நேசிக்கிறேன். எந்த மதத்தையும் நான் இழிவுபடுத்தி பேசுவதில்லை. யாரையும் நான் மதமாற்றம் செய்ய முயற்சித்ததில்லை. என்னுடைய சொந்த சகோதரர்கள் இருவர் இன்னும் இந்துக்களாகவே இருக்கிறார்கள்.

இந்து சகோதர சகோதரிகள் நான் பேசியதைக் கேட்டு வருத்தப்பட்டிருந்தால் நான் அதற்கு வருந்துகிறேன். உங்களை வேதனைப்படுத்துவதோ உங்கள் நம்பிக்கையை குறை சொல்லி குற்றப்படுத்தி இழிவுபடுத்துவதோ எனது நோக்கமும் இல்லை அதை நான் செய்கிறதும் இல்லை” எனக் கூறி உள்ளார்.