சுர்ஜித் மீண்டும் பெற்றோருடன் ஒன்றிணைய பிரார்த்திக்கிறேன்! ராகுல்காந்தி டிவிட்

டில்லி:

சுர்ஜித் மீண்டும் பெற்றோருடன் ஒன்றிணைய பிரார்த்திக்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான  ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

திருச்சி அருகே உள்ள மணப்பாறை பகுதி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மிட்கும் பணி 4 நாட்களாக  நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களிலும் சேவ் சுர்ஜித் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில்,  சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க தானும் பிரார்த்தனை செய்வதாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்,  ‘நாடே தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோர்களுடன் ஒன்றிணைய வேண்டும்  என்று நான் பிரார்த்திக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி