சென்னை:
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் என டிரம்ப் டிவிட் போட்டுள்ளார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  85 ஆயிரத்தை தாண்டிய நிலை யில்,  பலி எண்ணிக்கையும் 2700ஐ தாண்டியுள்ளது.  இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான வெண்டிலேட்டர்களை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து  டிரம்ப் பதிவிட்டுள்ள டிவிட்டில், “இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு வென்டிலேட்டர்கள்  நன்கொடை அளிப்பதாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நாங்கள் இந்தியா மற்றும் நரேந்திர மொடியுடன் இருக்கிறோம். தடுப்பூசி தயாரிப்பதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். நாம் ஒன்றாக சேர்ந்து, கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் அறிவிப்புக்கு மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.