இனி வாய்ஸ் தரமாட்டேன்’ பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முடிவு..

பெண்களுக்கு எதிராக குற்றங்கள சொலவதெல்லா உண்மை டிவி ஷோ மூலம் தட்டி கேட்டு பிரபலம் ஆனவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணான். அவ்வப்போது தனது இணைய தள பக்கத்திலும் வாய்ஸ் கொடுத்து வந்தார்.

நடிகை வனிதா திருமண விவகாரத்தில், முதல் மனைவி இருக்கும்போது வனிதாவை மணந்த பீட்டர்பால் பற்றி தட்டிக்கேட்டார். அதற்கு வனிதாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். குழாயடி சண்டைப்போல் வனிதா நடிகை லட்சுமி ராமகிருஷ்ணை அவதூறாக பேசி விரட்டினார். இதில் லட்சுமி அவமானப்பட்டு நின்றார். அதன்பிறகு எந்த பிரச்னையிலும் தலையிடாமல் அவர் அமைதியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நடிகை சுமலதா எம்பி இடுப்பில் கைவைத்தாக தகவல் படங்களுடன் வெளியானது.   அதை சிலர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்தனர்.

இதனால்  கோபம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், ’இனிமேல் சமூக வலைதளத்தில் நான் எதற்கும் குரல் கொடுக்கப்போவதில்லை. எனக்கு என் குடும்பம்தான் முக்கியம் அவர்களுக்குத் தான் முன்னுரிமை தருவேன். எதற்கும் குரல் கொடுக்கச் சொல்லி எனக்கு டேக் செயாதீர்கள்.  இப்போது குரல் கொடுக்கச் செல்பவர்கள் நான் தாக்கப்பட்டபோது எங்கு போனீர்கள்.

சமூக வலைதளத்தில்  வாய்ஸ் தருவதை நிறுத்தி விட்டேன். நான் அரசியல் கட்சியில் இல்லை. ஜாதி விவகாரத்தை என்னிடம் கொண்டு வராதீர்கள். எந்த பிரச்னையையும் யாரும் எனக்கு டேக் செய்யாதீர்கள்.
இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.