வருவாய் துறையின் அத்துமீறல்களால் கொந்தளித்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் நிதியமைச்சர்  அருண் ஜெட்லி மற்றும் பிரதமர் அலுவலகத்தை அணுக முடிவு செய்துள்ளனர்.
மும்பை: நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு அமைதியான கிளர்ச்சிக்கு தயாராகி வருகின்றனர்.
tax1
சமீபத்தில் ஒரு வருமான வரித்துறை அதிகாரி ஒரு பெரிய வங்கிக்கு முன்கூட்டிய வரி அறிவிக்கை அனுப்பினார். தன் கடமையைச் செய்ததற்கு பரிசாய் இடமாற்ற ஆணை கிடைத்தது.
இதனை அடுத்து கடந்த வாரம், ஜூலை 22 அன்று மும்பையில் நேரடி வரி வசூல் அதிகாரிகளின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், முன்னெப்போதும் நடந்திராத வகையில், இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் அதிகாரிகள்(மூத்த அதிகாரிகள் சிலர் உட்பட) கலந்துக் கொண்டனர்.
அதில் வருவாய்த் துறையின் அத்துமீறல்கள்குறித்து விவாதிக்கப் பட்டது.
வருமான வரித்துறையின் செயற்பாடுகளில் குறுக்கீடு செய்யும் வருமான வரித் துறையின் செயல்பாடு வருமான வரித்துறை அதிகாரிகளின்
மன உறுதியைக் காயப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மிகச் சக்தி வாய்ந்த அதிகாரியாய் கருதப்படும் குஜராத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தலைமையின் கீழ் வருவாய்த்துறை செயல்பட்டு வருகின்றது.
Hasmukh-Adhia-Revenue-Secretary
அத்துறையின் ஆணைகள், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள்குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
இந்த அவசரக் கூட்டத்தில் பங்கு பெற்ற இரு அதிகாரிகள் கூறுகையில், ” மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைமை அமைப்பின் சுயாட்சியை குலைக்கும் வகையில் வருவாய்த்துறையின் செயல்பாடுகள் உள்ளன.
இக்கூட்டத்தில் அதிகாரிகள் வருவாய்த்துறையின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. மேலும் நிதி அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலக கவனத்திற்கு இவ்விஷயத்தை   கொண்டுசெல்வதென தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
ஒரு மூத்த வருமானவரித்துறை அதிகாரி கூறுகையில், ” 1961- இந்தியாவின் அரசுப் பணி ஒதுக்கீடு – வர்த்தக விதிகளின் படி வருமானவரித்துறையினை செயல்பட விடாமல் தடுக்கின்றது.
ஆனால், வருவாய்த்துறை அத்துமீறி மைக்ரோ-மேலாண்மையில் ஈடுபட்டு வருகின்றது. வருமான வரித்துறையின் அன்றாட நடவடிக்கைகளான வரி மதிப்பீட்டு, பணி இடமாற்றங்கள் மற்றும் பணி நியமனங்களில் தலையிடுகின்றது.
“வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வருவாய் செயலாளர் அதியா நடத்தும் வீடியோ கூட்டங்களில் தெரிவிக்கும் கருத்துக்கள் குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன, என அதிகாரி கூறினார்.
tax3
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான தனது தரப்பின் பதிலை  வருவாய் துறை  வெளியிட்டுள்ளது, அதில், ” இந்த தீர்மானம். கண்டனதிற்குரியது. இவ்வாறு மீண்டும் நடந்தால்  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் .  எந்தத் துறைக்கும் சுயாட்சி அதிகாரமில்லை.  மத்திய  அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அனைத்து துறையும் கட்டுப்பட்டு நடந்துக் கொள்ள வேண்டும். “என தெரிவித்துள்ளார். இதில் வருவாய்த்துறையின் அத்துமீறல்கள் குறித்து எந்தக்  குறிப்பும் இல்லை.