டிரம்ப் பதவி விலகினால் மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள்….அர்னால்டு பதிலடி

நியூயார்க்:

அதிபர் பதவியை டிரம்ப் விட்டுக் கொடுத்தால் நாட்டு மக்கள் மீண்டும் நிம்மதியாக உறங்குவார்கள் என்று ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்துள்ளார்.

‘‘நான் அதிபர் பதவிக்காக போட்டியிட்ட போது சிலர் அர்னால்டு போன்ற பெரிய பெரிய நட்சத்திரங்களை வாடகைக்கு எடுத்து பிரச்சாரம் செய்தனர்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று பிரபல நடிகர் அர்னால்டு குறித்து விமர்சனம் செய்தார். மேலும், டிவி சீரியலான ‘தி அப்ரன்டீஸ்’ நிகழ்ச்சி குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு அர்னால்டு டுவிட்டர் பக்கத்தில் தனது பதிலடி பேச்சை வீடியோவில் பதிவு செய்து டுவிட்டரில் வெளியிட்டார்.
அதில் அவர் கூறுகையில், ‘‘ டிரம்ப் நாம் ஏன் இருவரும் நமது பணிகளை மாற்றிக் கொள்ளக் கூடாது. நீங்கள் எனது டிவி பணியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களது பதவியை எடுத்துக் கொள்கிறேன். அதன் மூலம் நாட்டு மக்கள் மீண்டும் நிம்மதியாக உறங்குவார்கள்’’ என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டிரம்புக்கு அமெரிக்காவில் மட்டுமின்றி உலகளவில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் பிரபலங்களும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: I take over your job so then people can finally sleep comfortably again arnold told against trumph, டிரம்ப் பதவி விலகினால் மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள்அர்னால்டு பதிலடி
-=-