சென்னை:

ஜினி ஆட்சியை பிடிப்போம் என்பது குறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஆட்சியை பிடிக்க முடியாது, ஆச்சிகளை வேண்டுமென்றால் பிடிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி, நகரத்தார் சமூகத்தினர் போராட்டம் நடத்திய நிலையில்,  நான் சொன்னது காரைக்குடி ஆச்சிகளை அல்ல…  மனோரமா ஆச்சியைதாங்க என்று மழுப்பலாக விளக்கம் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  காலா பட பாடல் வெளியீட்டு விழாவினபோது ரஜினி,  நதி நீர் இணைப்புதான் எனது வாழ்நாள் கனவு என்றும் ஆண்டவன் துணையுடன் மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நல்ல நேரம் பிறக்கும் என்றும் பேசினார்.

இதுகுறித்து மறுநாள்  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ரஜினியின்  நதி நீர் இணைப்புக்கு வரவேற்பு தெரிவிதார். ஆனால் தமிழகத்தில் அவரால் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டு மென்றால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொதுவாக  நகரத்தார் சமூகத்தில் திருமணமான பெண்களை ஆச்சி என்று அழைப்பது வழக்கம். இதன் காரணமாக நகரத்தார் சார்பில் நேற்று அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றி இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு,  நான் சொன்னது காரைக்குடி ஆச்சியை அல்ல, ரஜினியுடன் சேர்ந்து நடித்த மனோரமா ஆச்சியைதான் என்று கூறினார்.