சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா ….

மதுரை

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்  வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  இதுவரை, மொத்தமாக 2,57,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 2471 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 2037 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.தற்போதைய நிலையில் 388 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

கொரோனா சோதனை மேற்கொண்டேன். அதில் தனது லேசான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால்,  மருத்துவ ஆலோசனை யின்படி நான் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்கிறேன்.

சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் மருத்துவ நெறிமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி