மத்தியஅரசின் ‘இந்த மதிப்புமிக்க மரியாதைக்கு நன்றி’! ரஜினிகாந்த்

சென்னை:

த்தியஅரசு, நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த மதிப்புமிக்க மரியாதைக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர்  ரஜினிகாந்த் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

நடிகர் ரஜினி சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபபடும் என்றும்,  கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், Icon of Golden Jubliee என்ற பெயரில் ரஜினிக்கு, சினிமா துறைக்கான சிறப்பு விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மத்தியஅரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,
IFFI2019 இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழாவில் எனக்கு வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க மரியாதைக்கு இந்திய அரசுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி