போலி என்கவுண்டரில் என்னை கொல்லாமல் இருந்த போலீசாருக்கு நன்றி – கஃபில் கான்

--
உத்திரப்பிரதேசம்:
போலி என்கவுண்டரில் என்னை கொலை செய்யாமலிருந்த உத்தரப்பிரதேச காவல்துறை சிறப்பு பணி குழுவிற்கு நன்றி என்று  டாக்டர் கஃபில் கான் தெரிவித்துள்ளர்.
டாக்டர் கஃபீல் கான் போலியான குற்றச்சாட்டில் எட்டு மாதங்கள் உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் உத்தரபிரதேச அரசை கடுமையாக சாடியுள்ளார்.
மதுரா சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்ட அவர், மும்பையிலிருந்து மதுராவிற்கு மாற்றும்போது போலி என்கவுண்டரில் என்னை கொல்லாததற்க்கு உத்தரப்பிரதேச காவல்துறையின் சிறப்பு பணிக்குழுவிருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக  கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கஃபீல் கான் தெரிவித்ததாவது: மதுராவில் சிறையில் 8 மாதங்கள் அடைக்கப்பட்டிருந்தேன், 5 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் தராமல் என்னை சித்திரவதை செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.
கோரக்பூரின் பிஆர்டி மருத்துவ கல்லூரியின் பிரபல மருத்துவரான கஃபீல் கான் மேலும் கூறுகையில், மும்பையிலிருந்து மதுராவில் இருக்கும் சிறைக்கு என்னை அழைத்துச் செல்லும்போது போலியான என்கவுண்டரில் என்னை கொல்லாமல் இருந்ததற்கு உத்தரப்பிரதேச காவல்துறையின் சிறப்பு பணிக்குழுவிர்க்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கேலியாக கூறியுள்ளார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி மதுரா சிறையில் அதிகாரிகள் அவரை விடுவிக்க மறுப்பதாக  மருத்துவரின் கஃபீல் கானின்  குடும்பத்தினர் முன்பு குற்றம் சாட்டியிருந்தனர். சிறையிலிருந்து விடுவிக்காத்க அதிகாரிகளின் பெயரில் குற்றம் சாட்டவிருப்பதாக கபீர் கானின் சகோதரர் தெரிவித்த பின்பு இன்று அவரை சிறையிலிருந்து விடுவித்துள்ளனர்.
அலகாபாத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கோவிந்து மாத்தூர் மற்றும் நீதிபதி சௌமித்ர தாயல் சிங் அடங்கிய குழு ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்து,  15 நாட்களுக்குள் மருத்துவர் கபில் கானை விடுவிக்குமாறு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.