ண்டன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தான் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது எல்லாம் முடிந்தது என நினைத்ததாகவும், இரு செவிலியர்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து தன்னைக் காப்பாற்றியதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவ ஆலோசனைப்படி போரிஸ் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

ஆனால் அவருடைய உடல்நிலை மோசமானதால் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு கொரோனாவிலிருந்து மீண்ட போரிஸ் ஜான்சன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் மருத்துவமனையில் தன்னை கவனித்துக் கொண்ட இரு செவிலியர்களுக்கு உளப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.

“எல்லாம் முடிந்து விட்டது என நினைத்திருந்த வேளையில்,  கண்ணும் கருத்துமாக தன்னை கவனித்து உயிர்பிழைக்க வைத்தவர்கள் மெக் கீ மற்றும் பிதர்மா எனும் இரு செவிலியர்கள்” என நெகிழ்ச்சியுடன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மெக் கீ நியுசிலாந்து நாட்டின் இன்வெர்கார்கில் நகரைச் சேர்ந்தவர். பிதர்மா போர்ச்சுகல் நாட்டவர். அவரின் சேவையை அந்நாட்டு அதிபர் மார்செலோ ரெப்பெல்லோ டி சோசா பாராட்டி உள்ளார்.

இவ்விரு செவிலியர்களும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மருத்துவமனையில் பணிவிடைகள் செய்ததை தம் வாழ்நாளில் மறக்கவே முடியாத நிகழ்வு எனக் கூறியுள்ளனர்.