எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்ததுண்டு; யுவன் சங்கர் ராஜாவின் பகீர் தகவல்…..!

முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா கடந்த 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றி அமைத்துள்ளார் .

கொரோனா ஊரடங்கால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் யுவன்.

அதில் ரசிகர் ஒருவர், ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பயம் என்ன? நீங்கள் அதை எப்படி கடந்தீர்கள்?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள யுவன், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்ததுண்டு. ஆனால் அவற்றையெல்லாம் கடக்க எனக்கு இஸ்லாம் உதவியது” என்று தெரிவித்துள்ளார்.