சென்னை:

னக்கு சசிகலா செய்த கொடுமை காரணமாக தற்செய்யும் முடிவுக்கு வந்ததாகவும், வேறு யாராவது எனது இடத்தில் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் துணைமுதல்வர் ஓபிஎஸ்.

ஜெ. மறைவை தொடர்ந்து ஓபிஎஸ் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால், அவரை கைப்பாவையாக ஆட்டி படைக்க எண்ணிய சசிகலா குடும்பத்தினரின் மறைமுக முயற்சி  காரணமாக, ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியைவிட்டு வெளியேறினார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு இதே நாட்களில்தான் அவர், சசிகலாவை எதிர்த்து, ஜெ.சமாதியில் தியானம் மேற்கொண்டு,  சசிகலா எதிர்த்து தர்ம யுத்தம் மேற்கொள்ளப்வோக  தனது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன் காரணமாக அதிமுக இரண்டாக உடைந்தது. அதையடுத்து சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் இறங்கினார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக நீதிமன்றம் அவரை சிறைச்சாலைக்குள் உட்கார வைத்து விட்டது.

அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளராக இனம் காணப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அவருக்கு சசி குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடி காரணமாகவும், ஓபிஎஸ்-ன் நிபந்தனைகளின் பேரில் இரு தரப்பும் இணைந்து சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு வெளியேற்றி, அதிமுகவை கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர்.

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், தற்போது தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று தேனியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள்   கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் பரபரப்பான அதிர்ச்சி தகவல்களை பேசினார்.

அப்போது தான்,  ஜெயலலிதாவிற்கு மிகவும் விசுவாசமாக இருந்ததால் சசிகலா குடும்பத்தினரால் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டேன் என்றார். மேலும், அதிமுக சசிகலா குடும்பத்தின் பிடியில் கடந்த 30 ஆண்டுகளாக சிக்கி  இருந்து வந்ததாகவும் கூறினார்.

தான் அமைச்சராக இருந்தபோதும், முதலமைச்சராக இருந்தபோதும் தனக்கு அவர்கள் கொடுத்த டார்ச்சர் எண்ணிலடங்காது என்றும், தனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால், அதை தான்  ஜெயலலிதா வுக்காக  பொறுத்துக் கொண்டதாக கூறினார்.

சசிகலாவின் டார்ச்சருக்கு, என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால்  இந்நேரம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்ற ஓபிஎஸ் அந்நதளவுக்கு நான் பாதிக்கப்பட்டேன் என்றும் கூறினார்.

கடந்த 30 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் கட்சியை மறைமுகமாக இயக்கி வந்தாகவும், உடல் நலமில்லா மல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த,  ஜெயலலிதாவிற்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க வலியுறுத்தி னேன் என்றும், தற்போது அவரது மரணம் குறித்து,  விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால்  ஜெயலலிதா ,மரணம் குறித்து கருத்து கூற முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

ஓபிஎஸ்-ன் பேச்சு அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.