சென்னை,

மிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தமிழக ஆளுனரை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கினார். அப்போது தமிழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை திடீரென ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு சென்றார். அங்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது, தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி, திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துமாறு அழைப்பு விடுத்தார்.

அதைத்தொடர்ந்து, ராஜ்பவனுக்கு வெளியே வந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறும்போது,

தன் மகளின் திருமண விழாவிற்கு  அழைப்பு விடுத்தேன் எனவும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரிடம் பேசினேன் எனவும், குறிப்பிட்டார்.

மேலும், எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும் எனவே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என அப்போது ஆளுநரை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், சட்டமன்றத்தில் நம்பிக்கை நம்பிக்கையில்லா  தீர்மானம் யாரும் கொண்டு வரவில்லை என்றும், அதிமுக விற்கு எல்லா எம்.எல்.ஏ க்களும் ஆதரவாக இல்லை.

தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. அப்படி இருக்கிறது என்றால் முதல்வரே முன் வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

திமுக காங்கிரஸ் என்னும் முறையில் சட்டசபையை கூட்ட ஆளுனரை வலியுறுத்தியதாகவு, அதற்கு  சட்டபடி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன் என ஆளுனர் கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும்,

பாஜக தான் அதிமுகவை உடைத்தது, இப்பொது சேர்த்தது எல்லாமே. அவர்களுக்கு அஸ்திவாரம் தமிழகத்தில் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் எதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதே திட்டம் என்றும் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.