சிறந்தவர்களுக்கு எதிரான சவாலாக இருக்க விரும்புகிறேன்: ஜஸ்பிரிட் பும்ரா

சிட்னி: சிறந்தவர்களுக்கு எதிரான சவாலாக என்னை இருத்திக்கொள்ள விரும்புகிறேன் என்றுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் ஜஸ்பிரிட் பும்ரா.

தற்போது 26 வயதாகும் பும்ரா, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்று மிகச்சிறப்பாக செயல்பட்டார்.

இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “ஆஸ்திரேலியாவில் விளையாடுவது எப்போதுமே சவாலானது மற்றும் ஆர்வமூட்டக்கூடியது. அது ஒரு கடுமையானப் போட்டியாக இருக்கும்.

சிறந்த அணியுடன் மோதுவதை நீங்கள் எப்போதும் விரும்புவீர்கள் மற்றும் அழுத்தமான சூழல்களில் விளையாடுவதையும் ரசிப்பீர்கள்.

எனவே, ஆஸ்திரேலிய தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அதுவொரு ஆர்மூட்டக்கூடிய நிகழ்வு. சிவப்பு பந்தில் விளையாடக்கூடிய ஒரு போட்டியும் அதில் இடம்பெற்றுள்ளது என்பதை நாம் கவனிக்க வ‍ேண்டும். அனைத்தும் நல்லபடியாக நடக்கும் மற்றும் நல்ல நேரமாக அமையும் என்று நம்புகிறேன்” என்றுள்ளார் அவர்.