புரட்சி ஏற்படுத்த எனக்கு ஆசை!:  ரஜினிகாந்த்

சென்னை, 

னிக் கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திப்பேன் என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

ரஜினிகாந்த் கடந்த 31ந்தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்து உள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது கடந்த கால வாழ்க்கை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.

அப்போது, தான் 2 மாதம் பத்திரிகையில் பணிபுரிந்து இருப்பதாகவும் கூறி பத்திரிகையாளர்களுக்கு ஆவலை ஏற்படுத்தினார். கர்நாடகாவில் தான் வசித்துவந்தபோது 10வது வகுப்பு பெயிலாகிவிட்டேன். இதன் காரணமாக எனது பெற்றோர், என்னை,  நீ ‘படிக்க நீ லாயக்கு இல்லை’ வேலைக்கு போ என்று சொல்லிவிட்டார்கள்.

அந்த சமயம் எனது  நண்பர் ராமச்சந்திரன்  என்பவர்  ‘தமிழ் கர்நாடகா’ என்னும் பத்திரிகையில் பிழை திருத்துபவராக இருந்தார். நான் அவரை சந்தித்து எனக்கு வேலை கேட்டேன். அதைத்தொடர்ந்து அதே நிறுவனத்தில் எனக்கும்  பிழை திருத்துபவராக வேலை கிடைத்தது. நான் 2 மாதம் அந்த வேலை பார்த்தேன் என்று பெருமிதத்துடன்  கூறினார்.

அதைத்தொடர்ந்தே நான் சினிமா துறையில் காலடி எடுத்து வைதேன் என்றும், எனது முதல் நேர்முகத் தேர்வு 1976ம் ஆண்டு  ‘பொம்மை’ என்னும் நாடகத்திற்காக நடைபெற்றது என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

தனக்கு மீடியா மீது ஒருவித பயம் உண்டு…  உண்மையிலேயே நான் ஒரு மீடியாவை பார்த்து நடுங்குபவன் என்ற ரஜினி, மீடியா காரர்கள் தன்னை,  இப்படி நிக்கணும், அப்படி நிக்கணும், இந்த கேள்வி கேட்கணும், அந்த கேள்வி கேட்கணும் என்று என்னை திணறடிச்சுடுறாங்க… இதன் காரணமாகவே எனக்கு மீடியான்னா பயம்  என்று கூறினார். இந்த பயம் 1996-ம் ஆண்டு முதலே தனக்கு தொடர்கிறது என்ற ரஜினி, அதுபோல பட விழாவுகளுக்கு சென்றாலும் எனக்கு அங்கு பேசுவதில் எனக்கு பயம் இருந்தது. எதை பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற குழப்பம் காரணமாக மேடை ஏறுவதில் தயக்கம் இருந்தது என்றார்.

மேலும், தற்போது அரசியல் குறித்து அறிவிப்பு வெளியிட்டாச்சு.. ஆனால், அதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியவில்லை என்ற ரஜினி, நான் பேச நினைப்பதை எல்லாம் கூட்டத்திலேயே சொல்லிவிடுவதால், மீடியாவிடம் பேச ஏதும் இல்லாமல் போகிறது…  அதன் காரணமாக மீடியாக்காரர்களை சமாளிக்க முடியவில்லை என்றும், காமிராவை பார்த்ததும் டக்குனு பேச

அரசியல்  நான் புதுசு. ஆகவே  உங்க ஒத்துழைப்பு எனக்கு தேவை. உங்க ஒத்துழைப்பு   இல்லாம நான் எதுவுமே செய்யமுடியாது. எனவே நான் அப்பப்போ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா தயவுசெஞ்சு மன்னிசுக்கோங்க என்று செய்தியாளர்களிடம் ரஜினி மன்னிப்பு போரினார்.

மேலும், நம் அனைவருக்கும் பொறுப்பு இருக்கு, நடைபெறுவது  எல்லாமே தமிழகத்தில் இருந்து தான் தொடங்குது என்ற ரஜினி. இங்கிருந்து தொடங்கி, அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்துனும்னு எனக்கு ஆசை என்ற கூறினார். எனது ஆசை இந்த தலைமுறையில் நடக்கனும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்க..  இதற்கெல்லாம்  உங்க ஒத்துழைப்பு தேவை… நீங்க  இல்லாம நடக்காது.  உங்க தொடர்பு இருந்துகொண்டே இருக்கணும் என்றார்.

விரைவில்  ஒரு முறையான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும், அப்போது உங்களை சந்தித்து நிறைய பேசறேன்.

இவ்வாறு ரஜினி பேசினார்.