இன்னொரு ஓவியாவாக உருவாகி வருகிறார் லாஸ்லியா : பாத்திமா பாபு

105 சேலைகள் நகைககள் எனஅனைத்தும் கொண்டு சென்றேன். ஆனால், அதை அங்கே பயன்படுத்த தான் முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் பாத்திமா பாபு.

என்னை நானே உணர்ந்துகொள்வதற்கான சரியான பிளாட்பார்ம் ஆக பிக்பாஸ் நிகழ்ச்சியை கருதியதால், அதில் பங்கேற்க முடிவு எடுத்தேன்.

எனக்கு நடிக்க தெரியாது. எனக்கு சண்டை போடவும் தெரியாது. சண்டை நடைபெறும் இடத்திலிருந்து எப்போதும் ஒதுங்கியே இருப்பேன்.

வாக்குவாதம் செய்பவர்களையும், வாக்குவாதம் நடைபெறும் இடத்திலிருந்து எப்போதும் விலகியே இருக்க விரும்புபவள் நான். வாக்குவாதம் செய்பவர்களையும், வாக்குவாதம் நடைபெறும் இடத்திலிருந்து எப்போதும் விலகியே இருக்க விரும்புபவள் நான். வனிதா கத்தி கத்தி பேசுகிறார். பார்வையாளர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை சரியாக செய்கிறார். கமல் சார் என்னைப்பற்றிய நல்ல விசயங்களை சொல்லும்போதே, இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை போன்ற உணர்வை பெற்றுவிட்டேன் என கூறியுள்ளார் பாத்திமா பாபு.

மேலும் நான் செய்யும் சப்பாத்தி, வெண் பொங்கல் – சட்னி உள்ளிட்டவைகளை அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டனர். தர்ஷன் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். ஆனால், லோஸ்லியா மற்றும் சாண்டி சமபலத்துடன் உள்ளனர். லோஸ்லியா, விரைவில் அடுத்த ஓவியா ஆக ஒரு ரவுண்டு வருவார். சாண்டிக்கு அபார நகைச்சுவை திறமை உள்ளது. என்று பாத்திமா பாபு கூறினார்.

கார்ட்டூன் கேலரி