டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாற்றில் ரஜினிகாந்தை நடிக்கவைக்க நினைத்தேன்!:  ஷங்கர்

எஸ்.ஏ.சி.- ஷங்கர் – ராமசாமி

 

டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாற்றில் ரஜினிகாந்தை நடிக்கவைக்க நினைத்தேன் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

தனியொரு மனிதனாக அரசின் தவறான நடவடிக்கைகளையும் அரசியல்வாதிகளின் எதேச்சகார போக்குகளையும் எதிர்த்து போராடி வருபவர் டிராபிக் ராமசாமி.

நிஜ நாயகனாக உலாவரும் அவரது வாழ்க்கை கதை டிராபிக் ராமசாமி என்ற பெயரிலேயே தயாராகி உள்ளது. பிரபல இயக்குநரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமியாக நடித்திருக்கிறார்.

அவரது மனைவியாக ரோகினி நடித்துள்ளார்.

மேலும் பிரகாஷ்ராஜ், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.  வருகிற 22ந் தேதி படம் வெளியாக இருக்கிறது.

 

இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் பேசிய இயக்குனரும், எஸ்.ஏ.சந்திரசேகரின் மாணவருமான ஷங்கரும் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

“டிராபிக் ராமசாமியின் வாழ்க்யை ரஜினி நடிப்பில் இயக்க நான் முடிவு செய்திருந்தேன்” என்றார்.

மேலும், “இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கிறது. . அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியது உண்டு. இவரது வாழ்க்கைக் கதையை திரைப்படமாக எடுக்க நானும் ஆசைப்பட்டேன்.

டிராபிக் ராமசாமி, கத்தி எடுக்காத இந்தியன். வயதான அந்நியன் அம்பி.

இவரது வாழ்க்கை வரலாற்றை ரஜினியை வைத்து படம் எடுக்க நினைத்திருந்த எனக்கு,  எஸ்.ஏ.சி. நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம் ஏற்பட்டது உண்மை. ஆனாலும்,மகிழ்ச்சிதான்.

இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று ஷங்கர் பேசினார்.

கார்ட்டூன் கேலரி