தீபக் – சசிகலா

சசிகலாவின் கட்டுப்பாட்டில் நான் இருப்பதாக சொல்வது தவறு என்று  ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு ஒரு சிறப்பு பேட்டி அளித்தார்.  அதில்  அவர் தெரிவித்ததாவது:
“அதிமுக கட்சி ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி. அதனால் யார் முதல்வர் என்பது பற்றியும் கட்சியின் தலைவர் யார் என்பதையும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் முடிவெடுத்து சசிகலாவை ஏற்றுக்கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
அத்தை ஜெயலலிதாவுடன் கடந்த 35 ஆண்டுகளாக சசிகலா இருந்துள்ளார். கட்சியினர் அனைவரையும் சசிகலாவுக்கு நன்கு தெரியும். அதனால் அவரால் அதிமுகவை கண்டிப்பாக வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சசிகலாவின் குடும்ப கட்டுப்பாட்டில் நான் இருப்பதாக சொல்வது தவறு.  யாருடையை கட்டுப்பாட்டிலும் என்னால்  இருக்க முடியாது” என்று தீபக் தெரிவித்தார்.