காவிரி நீரை குடிக்கும் வரை கருப்புச்சட்டை : சரத்குமார் சபதம்  

 

காவிரி நீரை குடிக்கும் வரை தான்,  கருப்புச்சட்டையை கழற்றப்போவதில்லை என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான  சரத்குமார் சபதமிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து,  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “கர்நாடக தேர்தல் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போடக் கூடாது.

காவிரி நீர் தமிழகம் வரவேண்டும். அதற்காகவே கறுப்பு சட்டை அணிந்துள்ளேன். தமிழகத்துக்கு வரும் காவரி தண்ணீரை குடித்த பின் தான், நான் இந்த கருப்பு சட்டை அகற்றுவேன்” என்று தெரிவித்தார்.