அரசியலில் பிரியங்கா காந்தி: திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமையேற்றபிறகு இளந்தலைவர்கள் நியமனங்கள் அதிகரிக் கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக  கட்சியும் முன்பேதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில், பிரியங்கா காந்தியை  உத்திரபிரதேச மாநில (கிழக்கு) பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமனம் செய்து அறிவித்தார்.

பிரியங்கா காந்திக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது காங்கிரஸ் கட்சியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து பிரியங்கா காந்திக்கு அகில இந்திய தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவிட்டு டிவிட் போட்டிருந்தார்.

அதில்,  “துடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். தனது புதிய பொறுப்பில் அவர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி