டெல்லி: ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான தேதி பட்டியல் ஜனவரி 7 வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி-களில் சேர மாணாக்கர்கள் ஜெஇஇ நுழைவுத்தேர்வை எழுதி வெற்றிபெற வேண்டியது அவசியம். இந்த தேர்வு ஆண்டுதோறும் மத்தியஅரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தஆண்டுமுதல் (2021)  ஜேஇ  முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும், நீட் தேர்வை போல  13 மாநில மொழிகளில் தேர்வை நடத்த உள்ளது.

இந்த தேர்வுக்காக ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விண்ணபிக்க அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது, அதற்கான  கால அவகாசம் ஜனவரி 16ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில், ஜேஇஇ. முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் வருகின்ற 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.