பெங்களூரு

முன்னாள் பிரதமர் தேவே கவுடா தாம் ஓய்வு பெறப் போவதில்லை எனவும் பிரதமராக உள்ள ராகுலுக்கு பக்கம் இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கவுடா முன்னாள் பிரதமர் ஆவார். தற்போது இவருடைய மஜத கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ளது. தேவே கவுடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ளர். தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் தும்கூர் தொகுதியில் தேவே கவுடா பாஜக வின் பசவராஜை எதிர்த்து போட்டி இடுகிறார்.

தேவே கவுடா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் மூன்று வருடங்களுக்கு முன்பு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்டிருந்தேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக தேர்தலில் போட்டி இடுகிறேன். இதில் மறைக்க ஒன்றும் கிடையாது. எனக்கு பதவி ஆசை என்றுமே இருந்தது கிடையாது. ஆனால் நான் என்றுமே அரசியலில் இருந்து ஓய்வு எடுபதாக சொல்லவில்லை.

அத்வானி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதைப் போல் நான் ஓய்வு பெற மாட்டேன். எனக்கு ஆட்சியை விட எனது கட்சியை காப்பதே பிடித்துள்ளது. எனது மகன் குமாரசாமி நான் பிரதமராகலாம் என கூறி உள்ளார். ஆனால் அது குறித்து எனக்கு எவ்வித அக்கறையும் கிடையாது. எனது ஆசை எல்லாம் மோடி பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்பதும் அவரை நான் தைரியத்துடன் நேருக்கு நேர் சந்தித்து அவர் குற்றங்களை கூற வேண்டும் என்பதே ஆகும்.

எனக்கு இதை பிரதமர் முகத்துக்கு நேரே சொல்லும் தைரியம் உள்ளது. அதே நேரத்தில் ராகுல் காந்தி பிரதமராகும் போது நான் அவர் பக்கம் இருப்பேன். நான் பிரதமராக வேண்டும் என எனக்கு ஆசை இல்லை. ராகுல் பிரதமராகும் போது அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தாலே போதுமானதாகும். நான் என்றுமே காங்கிரசுக்கு ஆதரவாகவே இருபேன்.

நாங்கள் காங்கிரசை விட சிறிய கட்சியாக இருந்த போதிலும் எங்களுக்கு ஆதரவு அளிக்க சோனியா காந்தி அம்மையார் முடிவு எடுத்டார். இப்போது எனக்கு காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கும் கடமை உள்ளது. சில மாநிலங்களில் காங்கிரசுக்கு கூட்டணி ஆதரவு இல்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தமிழ்நட்டில் திமுகவுடனும் மகாராஷ்டிராவில் சரத் பவாரின் கட்சியுடனும் கூட்டணி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.