அப்பல்லோவுக்கு நானும் வருவேன்: விசாரணை ஆணையத்திடம் தீபா மனு

--

சென்னை:

ஜெ. மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம், ஜெ. சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது. இந்த நிலையில்,  அப்பல்லோ வுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெ.தீபா மனு கொடுத்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக  ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.  ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குக நெருக்கமானவர்கள், ஜெ.க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெ. வீட்டு வேலைக்காரர்கள், உதவியாளர்கள் என பலரிடம்  விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆறுமுக சாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், வரும் 29-ம் தேதி ஜெ. சிகிச்சை பெற்ற  அப்பல்லோலோ மருத்துவ மனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவுள்ளதாக அறிவித்து உள்ளது.

இந்த ஆய்வுக்கு அப்பல்லோ நிர்வாகமும் சம்மதம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும், ஜெய லலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தன்னையும் மனுதாரராக ஏற்க வேண்டும்   ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்  மனு செய்துள்ளார்.

அதில், விசாரணை ஆணைய உறுப்பினர்கள் ஜெ. சிகிச்சை பெற்ற அப்போலோவில் விசாரிக்க செல்லும்போது தம்மையும் உடன் அழைத்து செல்ல வேண்டும் என்று  தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.