ஐபிஎல் 2019 : தோல்வி குறித்து துவளாத தோனி உலகக் கோப்பையில் கவனம்

தராபாத்

பிஎல் 2019 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனி உலகக் கோப்பையில் கவனம் செலுத்த உள்ளதாக கூறி உள்ளார்.

நேற்று ஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் 2019 போட்டியின் இறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது.   மும்பை இந்தியன்ஸ் அணி நான்காம் முறையாக இந்த போட்டியில் வெற்றி பெற்றது.   வெற்றியின் விளிம்பு வரை வந்து தோல்வியை சந்தித்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனியிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

அவர்களுக்கு பதில் அளித்த தோனி, “எங்கள் அணிக்கு நல்ல வாய்ப்பு  இருந்தது.  நாங்கள் இறுதிப்போட்டி வரை வந்துள்ளோம்.   இதற்கு எங்களது ஆட்ட திறமை காரணம் ஆகும்.   நாங்கள் வெற்றி பெறவில்லை எனினும் இந்த ஐபிஎல் கோப்பையை எங்கள் இரு அணிகள் மட்டுமே மாறி மாறி வென்று வருகின்றன.   இரு அணிகளுமே பல முறை தவறுகள் செய்தன.  எங்களது அணியினர் நன்கு விளையாடினார்கள்.

இந்த தோல்வியை பற்றி விவாதிப்பதை இதோடு நிறுத்தி விட்டு இனி உலகக் கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்த உள்ளேன்.   அடுத்த முறை ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறுவது குறித்து உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அணியுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.    எங்களுக்கு தற்போது இந்த தோல்வி குறித்து ஆராய நேரம் இல்லை.   நான் அடுத்த போட்டியிலும் இதே அணியில் இருப்பேன் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி