‘தொடர்ந்து எழுதுவேன்:’ ஜெயக்குமாருக்கு குருமூர்த்தி பதில்!

சென்னை,

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் டுவிட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அவரை படித்த முட்டாள் என்றும், அவர்தான் ஆண்மையற்றவர் என்றும் ஆவேசமாக கூறி யிருந்தார்.

ஆர்.கே.நகரில்,  டிடிவி தினகரனின் வெற்றியை தடுக்காத ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். ஆகியோர் ஆண்மையற்ற பேடிகள். அவர்களுக்கு லஞ்சம் வாங்குவதும், காலில் விழுவதும்தான் தெரியும் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி டுவிட்டரில் விமர்சித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதில் அளித்து, குருமூர்த்தி மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில்,

அதிமுக தலைமை பலவீனமானது என்று தான் இப்போது கூறவில்லை. ஏனகனவே பல முறை கூறியிருக்கிறேன். எடப்பாடி ஓபிஎஸ் அரசு என் ஆலோசனையில் இயங்கிக்கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயத்தை தீர்த்தற்காக தமிழக அமைச்சருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

நான் எப்பொழுதும் முதல்வருக்கோ, அமைச்சர்க ளுக்கோ  அறிவுரை கூறவில்லை. சுயாதீனமான எழுத்தாளர் என்ற முறையில், கட்சிகள் மற்றும் தலைவர்கள் குறித்து தொடர்ந்து எழுதுவேன் என்றும், அதை அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதுபற்றி தான் கவலைப்படுவதில்லை என்றும்,   =எனது கருத்துக்களை நான் தொடர்ந்து வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.