ம.பி.யில் தான் இறப்பேன்: ஆட்சியிழந்த பாஜக முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சவுகான் விரக்தி

போபால்:

டந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த பாஜகவும், முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானும் இந்த தேர்தலில் பதவியை பறிகொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி  பிதற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் பாஜக முதல்வரான சிவ்ராஜ் சவுகான், ஆட்சி போன் விரக்தி காரணமாக, தான் ம.பி.யில்தான் வாழ்வேன், இங்குதான்  இறப்பேன் என்று பேசி உள்ளார். முன்னாள் முதல்வரின் இந்த பேச்சு,  பாஜகவினரிடையே சோகத்தையும், எதிர்க்கட்சி யினரிடையே சிரிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில், ஆட்சி அமைக்க 116 தொகுதிகள் தேவைப்படும் பட்சத்தில், 114 இடங்களை கைப்பற்றி உள்ள காங்கிரஸ், 15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு சாவு மணி அடித்து உள்ளது.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ள நிலையில் ஓரிரு நாளில் காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் பாஜக முதல்வரான சிவ்ராஜ்சிங் சவுகான், மாநிலத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்கு தானே பொறுப்பு ஏற்பதாகவும்  தெரிவித்து உள்ளார். மேலும், மாநிலத்தில் பாஜகவுக்கு 15 ஆண்டு காலம் ஆட்சி செய்ய ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியவர்,   விவசாயிகளின் துயரங்களை முடிவுக்கு கொண்டு வர ஆசைப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  தொடர்ந்து, மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றவர்,  மத்தியப் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கேயே இறப்பேன் எனவும் கூறினார்.

பாஜக முன்னாள் முதல்வரின் விரக்தியான பேச்சு பாஜக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.