தமிழக இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வேன் : மு க அழகிரி

துரை

மிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக முக அழகிரி கூறி உள்ளார்.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி – தயாளு அம்மாளின் முதல்  மகன் அழகிரி.   திமுக தென் மண்டல பொருப்பாளராக இருந்த இவ்ர் தனது தந்தையுடன் ஏற்பட்ட மனத்தாங்கலால் அரசியலை விட்டு விலகி இருந்தார்.    கருணாநிதி மறைவுக்கு பின்னர் மீண்டும் அரசியலில் இறங்க அழகிரி முடிவு செய்துள்ளதாக கூற்ப்படுகிறது.

வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் மவுன ஊர்வலம் செல்ல இருப்பதாக அழகிரி தெரிவித்திருந்தார்.   மதுரை சத்யசாய் நகரில்  வசிக்கும் அழகிரி நேற்று தனது ஆதரவாளர்களை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்ட முடிவில் செய்தியாளர்களை அழகிரி சந்தித்தார்.  அப்போது அவர் தமிழகத்தில் இடைத் தேர்தல் வந்தால் தாம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.