அந்த ஒரு கோடி.. ஒரு கோடிய எப்ப வேணா தரத் தயார்!:  ரஜினி உறுதி

 

நடிகர் ரஜினிகாந்த்துடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று காலை சந்தித்தனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

சந்திப்பின்போது, நதிகள் இணைப்புக்காக தருவதாகக் கூறிய ஒரு கோடி ரூபாயை ரஜினி மத்திய அரசிடம் அளிக்க வேண்டும் என அய்யாக்கண்ணு கோரியதாகவும், அதற்கு ரஜினி எப்போது வேண்டுமானாலும் ஒரு கோடி ரூபாயை தரத் தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும் அய்யாக்கண்டு தெரிவித்தார்.