Random image

தமிழக நெசவாளர்கள் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்! ஈரோட்டில் ராகுல் காந்தி பேச்சு…

சென்னை: தமிழகநெசவாளர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்  என்று  ஈரோட்டில், நெசவாளர்களிடையே பேசிய  ராகுல் காந்தி கூறினார்.  ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராகுல் காந்தி நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி  தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் முதல்கட்டமாக 3 நாள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

வணக்கம் தமிழகம் என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ராகுல்காந்தி பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் முதல்நாளான நேற்று முன்தினம்  ராகுல்காந்தி கோவையில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.  2-வது நாளான நேற்று  ராகுல்காந்தி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு மாவட்டத்தின் ஓடாநிலை பகுதியில் உள்ள நெசவாளர்களுடன் ஒன்றாக அமைர்ந்து ராகுல்காந்தி மதிய உணவு சாப்பிட்டார். அப்போது தன்னுடன்  அமர்ந்து ராகுல் காந்தி உணவருந்தியவர்களுடன்  செல்பி எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் நிகழ்ச்சியில், நெசவாளர்கள் சார்பில் ராகுல் காந்தி புகைப்படம் பொறித்த கைத்தறியால் நெய்யப்பட்ட போர்வை அவருக்கு பரிசாக வழங்கபட்டது.
அப்போது, ஈரேர்டு நெசவாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினை குறித்து ராகுலுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தொழிலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து,  கூட்டத்தில் பேசிய ராகுல் இந்தியாவில் உள்ள விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பலப்படுத்தப்பட்டால், எல்லையில் சீனா வாலாட்ட நினைக்காது. நெசவாளர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என உறுதியளித்தார்.

ஏழைகளின் சக்தியை மத்திய அரசு உணராமல் உள்ளதாகவும் ஆனால் தற்போது அந்த சக்தியை உணர்த்தும் வகையில் விவசாயிகள் மோடியை வெளியே வர முடியாத அளவு செய்து இருப்பதாக குற்றம் சாட்டியதுழடன்,  அனைத்து வகை ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் என்பதை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில் அவை நிறைவேற்றப்படும் என்றார்.

அதேபோல ஏழ்மை குடும்பங்கள் ஒவ்வொன்றும் 72,000 பெறுவதை உறுதி செய்வோம் எனவும் தெரிவித்தார். மேலும் பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி என்பது திட்டமிட்டு தொழிலாளர்களின் சிறு குறு தொழில்களையும் முடக்குவதற்காக மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் இதனை ஊடகங்கள் ஆதரிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவு குற்றம் சாட்டியவர்,  இந்தியாவில் ஒரு சில ஊடகங்கள் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு பணக்காரர்களுக்கு வழங்கும் கடனை தள்ளுபடி செய்வது போல் ஏன் ஏழைகளுக்கு வழங்கும் கடனை தள்ளுபடி செய்வது இல்லை, மோடி அரசு பணக்காரர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்றவர், தற்போது இருவகையான இந்தியாவாக இருந்து வருகிறது, அதில் தனக்கு  விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்.

வங்கிகளிலிருந்து ஏழைகளுக்கும் சிறு குறு தொழில் புரிவோருக்கு உதவிகள் கிடைத்திட வேண்டுமென வலியுறுத்தியவர்,  . காங்கிரஸ் கட்சியின் நோக்கம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதும் வறுமையை ஒழிப்பதே என்றும் தெரிவித்தார். மத்தியில் ஆளுகின்ற அரசு மொழிவாரியாக மதவாரியாகவும் பிரித்தாளும் ஆனால் எங்களின் நோக்கம் அனைத்தையும் ஒருங்கிணைப்பது என தெரிவித்தார்.

ஒரு நாட்டின் தலைவர் என்பவர் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் அகம்பாவம் கொண்டவராக செயல்பட்டால் நாடு எப்படி வளர்ச்சியடையும் எனவும் பேசினார்.