தண்ணீர் சிக்கனம் குறித்து அறிய இஸ்ரேல் போகப்போறேன்….! கெத்து காட்டும் முதல்வர் எடப்பாடி

சென்னை:

13நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி, தண்ணீர் சிக்கனம் குறித்து அறிய இஸ்ரோல் நாட்டுக்கு போகப்போறேன் என்று தெரிவித்து உள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க 13 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு  சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். அவருக்கு அதிமுகவினர் திளராக வந்து வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து,   விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   அனைத்து ஊடக நண்பர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியதுடன், தனது சுற்றுப்பணம் குறித்து விளக்கினார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, மொத்தம் ரூபாய் 8,835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்துள் ளோம். இது தொடர்பாக  41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன. இதனால், 35,520 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், தொழில் முதலீட்டாளர்கள், நம்முடைய தமிழகத்தில் புதிய தொழில் துவங்க, எதிர்பார்த்ததைவிட ஆர்வமாக இருக்கின்றார் கள் என்றவர்,  நீண்ட நாட்களாக தமிழகத்திலிருந்து எந்தவொரு முதலமைச்சரும் வெளிநாடு செல்லவில்லை என்ற குறைபாடு இருந்தது. அந்தக் குறைபாட்டை இப்பொழுது தீர்த்து வைத்திருக்கின்றோம் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில், பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில், அதாவது ஒரு மாவட்டத்தில் 70,000 லிட்டர் முதல்  80,000 லிட்டர் வரை பால் சேகரிக்கிறோம். ஆனால் அங்கு ஒரே இடத்தில் ஒரு பண்ணையில் 1,20,000 லிட்டர் பால் கறக்கிறார்கள். தமிழகத்தின் வேளாண் பெருமக்களின் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு. இங்கு இருக்கும் கால்நடைகள் ஒரு நாளைக்கு 15 முதல் 20 லிட்டர் பால் மட்டும்தான் கறக்கிறது, ஆனால், அங்கு இருக்கும் பசு, ஒரு நாளைக்கு 70 லிட்டர் பால் கறக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலப்பினப் பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலமாக, அவர்கள் கூடுதல் வருமானம் பெறமுடியும். எனவே, அந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்தாக தெரிவித்தார்.

மேலும்  தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்து, வெளிநாட்டிற்குச் சென்று தொழில் துவங்கிய தொழிலதிபர்கள், தமிழகத்திற்கு வந்து தொழில் துவங்குவதற்கு இந்த “யாதும் ஊரே திட்டம் ஒரு மைல் கல்லாக அமையுமென்று பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

அதைத்தொடர்ந்து உங்களது வெளிநாடு பயணம் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து அறிந்துகொள்ள அடுத்து இஸ்ரேல் செல்ல இருக்கிறேன் என்றார்.

நாம் விவசாயத்துக்காக ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை இஸ்ரேலில் 7 ஏக்கருக்கு பயன்படுத்தும் நவீன வசதியை புகுத்தியிருக்கிறார்கள். அந்தளவிற்கு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் நாடு இஸ்ரேல். அதுமட்டுமல்லாமல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத் திற்குப் பயன்படுத்துகிறார்கள். நம் மாநிலத்தில் பருவமழை பொய்த்து விவசாயிகள் பாதிக்கப்படு ,வதால், நீரை சிக்கனமாக பயன்படுத்துதலை அறிந்து வருவதற்கு இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கின்றோம்.

இவ்வாறு எடப்பாடி கூறினார்.

எடப்பாடியாரின் வெளிநாட்டு பயணத்தை திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், மீண்டும் வெளிநாடு செல்ல இருப்பதாக கூறி கெத்து காட்டி உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

You may have missed