பாஜகவுக்கு முழுக்கு: காங்கிரசில் இணைகிறார் அப்துல்கலாம் அண்ணன் மகன்

ராமேஸ்வரம்:

காங்கிரஸில் இணைந்து செயல்படப் போவதாக  அப்துல் கலாமின் அண்ணன் மகன் ஹாஜா தெரிவித்து உள்ளார். பாரதியஜனதா கட்சியின் அகில இந்திய சிறுபான்மை துறை செயலாளராக இருந்து வருபவர் ஏ.பி.ஜே.எம். ஹாஜா. இவர் பாஜகவில் இருந்த விலகி காங்கிரஸ் பேரியக்கதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்துல்கலாம் 3வது ஆண்டு நினைவுதினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் அணுசரிக்கப்பட் டது. இதையொட்டி தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்ட அப்துல் கலாமின் அண்ணன் மகனான ஏ.பி.ஜே.எம். ஹாஜா செய்யது இப்ராஹிம், “விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, காங்கிரஸ் பேரியக்கத்தில் என்னை இணைத்துக் கொள்ளப் போகிறேன்”  என்று கூறி உள்ளார்.

ஏ.பி.ஜே.எம். ஹாஜா செய்யது இப்ராஹிம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மறைந்த அப்துல் கலாமுக்கு சிறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அப்துல் கலாமின் 3வதுஆண்டு நினைவு தினம் அணுசரிகக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி  அப்துல் கலாம் அவர்களுடைய அண்ணன் மகன் ஏ.பி.ஜே.எம்.ஹாஜா செய்யது இப்ராஹிம் கலந்துகொண்டு, அப்துல் கலாமுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சசந்தித்த ஏ.பி.ஜே.எம் ஹாஜா செய்யது இப்ராகிம்,  “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரதிய ஜனதா கட்சியில் மாநில மற்றும் அகில இந்திய சிறுபான்மை துறை செயலாளராக பதவி வகித்த நான், அப்பதவியில் இருந்து விலகி, இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் என்னை இணைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.

விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் அவர்களைச் சந்தித்து கலந்து பேசி அவர் தலைமையில் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களைச் சந்தித்து, காங்கிரஸ் பேரியக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டு மக்கள் பணியாற்ற விரும்புகிறேன்”  என்று கூறினார்.

ஹாஜாவின் இந்த அறிவிப்பு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.