ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்….வைகோ சபதம்

--

சென்னை: ‛

ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘14 வருடம் கழித்து திமுக கொடி பறக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலினை தமிழக முதல்வராக்கும் முடிவோடு இங்கு வந்துள்ளேன். ஸ்டாலினை முதல்வராக்குவேன். திமுக.வை அழிக்க யாரையும் அனுமதிக்கமாட்டேன்’’ என்றார்.