“போராடாமல் எப்போதும் நான் ஓய்வதில்லை” – கிறிஸ் கெய்லின் உத்வேக கருத்து

ஷார்ஜா: போராடாமல் நான் எப்போதும் ஓய்ந்து போவதில்லை என்று தான் சார்ந்த பஞ்சாப் அணிக்கு உத்வேகம் ஊட்டியுள்ளார் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கிறிஸ் கெய்ல்.

பஞ்சாப் அணி தனது முதல் போட்டி தவிர, அடுத்தடுத்து தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது பஞ்சாப் அணி.

இந்த அணியில் ஏலம் எடுக்கப்பட்ட கிறிஸ் கெயில், இதுவரை ஒரு போட்டியில்கூட அணியில் இடம்பெறவில்லை. கடந்த போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன மற்றும் அதுதொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கெய்ல் தனது அணியினருக்கு கூறியுள்ளதாவது, “நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன்!!! நான் போராடாமல் எப்போதும் ஓய்வதில்லை. நான் ஒரு பாஸ் – அது எப்போதும் மாறியதில்லை!!

நீங்கள் என்னிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும்… அதற்காக நான் செய்யும் அனைத்தையுமே அல்ல. எனது விளையாட்டு பாணியை மறக்க வேண்டாம்!! உங்கள் கவலைகளுக்கு நன்றி” என்றுள்ளார் கெய்ல்.