எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன்: டிடிவி அறிவிப்பு

சென்னை:

சென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சயில் பங்கேற்க மாட்டேன் அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

தமிழக அரசு சார்பில்  கொண்டாடப்பட்டு வரும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 100வது ஆண்டு நிறைவு விழா வரும் (செப்டம்பர்) 30-ந்தேதி பிரமாண்டமாக சென்னையில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி. உள்பட பல திமுகவினரின் பெயர்கள் மற்றும் அமமுக தலைவர்  டிடிவி தினகரன் பெயரும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், திருவாரூர் இடைத்தேர்தலில் என் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சாவல் விடுத்தார். மேலும்,  எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்ற டிடிவி தினகரன்,  அழைப்பிதழில் பெயர் சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகவே என்றும் குற்றம் சாட்டினார்.

அதிமுக அமைச்சர்களை அமமுகவில் சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை,  33 அமைச்சர்களை சேர்ப்பதற்கு பதில் அரசியலை விட்டு போய்விடலாம் என்றார்.

திமுக,காங்கிரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என அதிமுக கூறிக்கொண்டு என்னைப் பற்றிதான் அத்தனை மேடைகளிலும் பேசினார்கள்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக தொண்டர் ஒருவரை ஜெயிக்கட்டும் பிறகு என்னை பார்க்கலாம். இடைத்தேர்தலில் ஜெயிக்கட்டும் அதிமுக திமுக முடிந்தால் இடைத்தேர்தலில் எங்களை ஜெயித்து பார்க்கட்டும். அதிமுக திருவாரூரில் டெபாசிட் வாங்காது. திருப்பரங்குன்றத்திலும் டெபாசிட் வாங்க விடமாட்டோம்.

எடப்பாடி வீரர் போன்று பேசுகிறார் அதிமுகவை 33 அமைச்சர்களும் டெண்டர் கம்பெனி போல் நடத்து கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தனது கோழை தனத்தை மறைக்கவே வீரர் போன்று பேசுகிறார்.

இவ்வாறு டிடிவி கூறியுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: I will not attend the MGR Century Festival function... says ttv dhinakaran, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: சிறப்பு நாணயம் வெளியிட கோரி
-=-