பைடன் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன்! டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என தற்போதைய டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் போட்டியிட்டார். தேர்தலில் குடியரசு கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் ஜோ பைடன் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவரது பதவி ஏற்பு விழா ரும் 20-ம் தேதி  நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவி வெளியிட்டுள்ளார்.

அதில்,  ’ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை என்பதை கேள்வி கேட்ட அனைவரிடமும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.