மன்னார்குடி: 

சிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன் என்று அவரது சகோதரர் திவாகரன் இன்று செய்தியாளிடம் கூறினார்.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக மற்றும், ஜெ. சொத்துக்களை கைப்பற்றுவதில் சசிகலா குடும்பத்தினரிடைய பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டதால், கட்சியை திவாகரன் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டார். அது பலனளிக்காத நிலையில் சுயேச்சையாக தேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சசிகலா சகோதரர் திவாகரனுக்கும், டிடிவி தினகரனும் இடையே ஏற்கனவே இருந்த மோதல் தற்போது பகிரங்கமாக வெடித்தது. இதன் காரணமாக திவாகரன், டிடிவியை கடுமையாக வசை பாடினார். மேலும், திவாகரனின் மகன் ஜெய்ஆனந்தும் டிடிவியை கடுமையாக விமர்சனம் செய்து சமுக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திவாகரன் ஏற்கனவே இருதய ஆபரேஷன் செய்தவர் அவர் அமைதியாக இருப்பது நல்லது என்றும், திவாகரன் ஒரு மனநோயாளி என்றும் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், டிடிவி, திவாகரன்  மோதல் காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளான, சசிகலா, தனது வழக்கறிஞர் செந்தூர் பாண்டி மூலம் திவாகரனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடந்த வாரம் வழக்கறிஞர்  நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், `எனது கட்சிக்காரரின் (சசிகலா) இளைய சகோதரரான தங்கள் மீது அதிக பாசம் கொண்டவர். ஆனால், தற்போது உங்களில் முரண்பட்ட செயல்பாடு களால், என் கட்சிக்காரர் கனத்த இதயத்துடன் இந்தச் சட்ட அறிவிப்பை உங்களுக்கு அனுப்புகிறார்.  சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ தாங்கள் (திவாகரன்)  பயன்படுத்தக் கூடாது. அதுபோல உடன் பிறந்த சகோதரி என ஊடகங்களில் பேசக் கூடாது. சசிகலா குறித்து  உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரிவிக்கக் கூடாது. இந்த நோட்டீஸ் கிடைத்த பின்னரும் தொடர்ந்து பேசினால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சசிகலா குடும்பத்தில் நிலவி வரும் பிரச்சினை மேலும் அதிகரித்து பகிரங்கமாக வீதிக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று தனது மன்னார்குடி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா சகோதரர் திவாகரன்,  சிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி என்று கனத்த இதயத்துடன்கூறினார்.  மேலும், சசிகலாவின் நோட்டீசை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றவர்,இனி சசிகலா குறித்து பேச மாட்டேன் என்றும் கூறி உள்ளார்.

மேலும், தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம்; என்று கூறிய திவாகரன், இதன் காரணமாக  எங்கள் அரசியல் பயணம் நின்று விடாது என்றும் எச்சரிகை விடுத்தார்.

டிடிவி தினகரன், திவாகரனின் பகிரங்க மோதல் சசிகலா குடும்பத்தில் மட்டுமல்லாது தமிழக மக்களிடையே பெரும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.