சென்னை:

மிழகத்தில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன் என்று பாஜக மூத்ததலைவர்  சுப்பிரமணியசாமி தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த 5 தொகுதிகளுக்கும் பலத்த இழுபறிக்கு பின்பு இன்றுதான் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த தேர்தலில், பாஜகவுக்கு டெபாசிட் பறிபோன நிலையில், தற்போது டெபாசிட்டையாவது பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதில்லை என்று தெரிவித்து உள்ளார். இதற்கு காரணமாக, தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடாததால், தான் பிரசாரம் செய்யப்போவதில்லை என்று சல்ஜாப்பு கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக டெப்பாசிட் வாங்காது என்று சுப்பிரமணியசாமி தெரிந்துகொண்டார் போலும்… எதுக்கு வேஸ்டா பிரசாரம், அது இதுன்னு நேரத்தையும் உடல்உழைப்பையும் வேஸ்ட் பண்ணுவது…. என்று நினைத்துக்கொண்டு பிரசாரம் செய்வதை நாசூக்காக தவிர்த்து உள்ளார்.