இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… புதுச்சேரி அமைச்சர் திடீர் அறிவிப்பு !

புதுச்சேரி: இனிமேல் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என்று புதுச்சேரி மாநில அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவித்து உள்ளார்.

புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிபெற்று வருபவர் அமைச்சர் மல்லாடி கிருண்ணாராவ். காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவரான அவர், தொர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறது.  அவரது 25 ஆண்டுகள் சேவையை பாராட்டும்படியாக,  ஏனாமில்  வெள்ளிவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி, சாபநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர்  பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில்,   அமைச்சர் மல்லாடி கிரு‌ஷ்ணாராவ் பேசும் வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதில் ,  நான் புதுவை மற்றும் ஏனாம் தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். இனி நானோ, எனது குடும்ப உறுப்பினர்களோ யாரும் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என கூறினார்.

புதுச்சேரியிலும் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சரின் அறிவிப்பு தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.