நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் : கீர்த்தி சுரேஷ்

த்தூர்

தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தற்போது தென் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் நடித்த தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் படத்தின் மூலம் இவர் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். தற்போது இவர் நடித்து வெளியாகி உள்ள சர்க்கார் உள்ளிட்ட திரைப்ப்டங்களும் இவருக்கு மேலும் புகழ் அளித்துள்ளது.

நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த ஒரு விழாவில் கலந்துக் கொள்ள வந்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கீர்த்தி, “முதலில் நான் மலையாள திரை உலகில் அறிமுகம் ஆனேன். ஆயினு எனக்கு தமிழில் நடித்த பிறகே ஒரு அங்கீகரம் கிடைத்தது. நான் படிக்கும் போது எனக்கு நடிகையாகும் எண்ணமில்லை. கடவுளின் ஆசியால் நடிகை ஆகி இருக்கிறேன்.

நான் கடினமாக உழைத்து இந்த திரை உலகில் புகழ் பெற்றுள்ளேன். தற்போது தமிழ் சினிமாவில் பல புதிய இயக்குனர்கள் வித்யாசமான படங்களை தருகின்றனர். ரசிகர்களும் புதிய விதமான படங்களை ரசிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். நானும் முடிந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்/

எனக்கு இப்போது திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் இல்லை. நான் இன்னும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன். நடிகர் விஜய் உடன் நடித்து விட்டேன். அஜித் உடன் நடிக்க வாய்ப்பு வர வேண்டும் என இருந்தால் அது நிறைவேறும். எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் சிறிதும் கிடையாது.” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி