யாரோ ஒரு சிலர் நடந்துகொள்ளும் விஷயத்துக்காக நான் ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன் : பிரசன்னா

துல்கர் சல்மானின் வரனே அவசியமுண்டு படத்தில் பிரபாகரனை அவமானப்படுத்தும் விதத்தில் காட்சி அமைந்திருப்பதாக கூறி தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர் .

அதனை தொடர்ந்து துல்கர் சல்மான் ட்விட்டரில் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் நடிகர் பிரசன்னா ட்விட்டரில் துல்கருக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

இப்படி தவறான புரிதலால் சிலர் விமர்சிப்பதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரசன்னா தெரிவித்திருந்தார். அதற்கு துல்கர் சல்மான் நன்றி தெரிவித்து இருந்தார்.

இதனால் பிரசன்னாவையும் அவர் குடும்பத்தினரையும் நெட்டிசென்கள் படு கேவலமாக விமர்சித்து வருகின்றனர் .

இதனால் தற்போது ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிவிடலாமா என யோசித்து வருவதாக பிரசன்னா கூறியிருப்பதாக செய்தி வந்ததது .

ஆனால் இது தொடர்பாக பிரசன்னா “யாரோ ஒரு சிலர் நடந்துகொள்ளும் விஷயத்துக்காக நான் ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன். பலமுறை எனக்கு எவ்வளவோ அன்பும், ஆதரவும் ட்விட்டரில் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார் .