வங்க தேசத்தின் மீது இந்தியா படையெடுக்க வேண்டும் : சுப்ரமணியன் சாமி

--

கர்தலா,

ந்துக்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்த இந்தியா வங்க தேசத்தின் மீது படை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி தற்போது திரிபுராவில் பயணம் செய்து வருகிறார்.   அகர்தலா நகரில் ”சன்ஸ்கிருதிக் கௌரவ் சன்ஸ்தான்’ என்னும் நிகழ்வில் கலந்துக் கொண்டர்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசி உள்ளார்.   அப்போது அவர் பல விவகாரங்களில் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார்.

சுப்ரமணியன் சாமி, “பாகிஸ்தான் நாட்டுடன் அமைதிப் பேச்சு நடத்த தேவையே இல்லை.  இம்ரான் கான் சொல்வதை கருத்தில் கொள்ள வேண்டாம்.   அவர் வெறும் வேலைக்காரர் மட்டுமே.    பாகிஸ்தான் அரசை நடத்துவது ராணுவம்,  ஐஎஸ்ஐ, மற்றும் பயங்கரவாதிகள் தான்.   இம்ரான் அவர்களுக்கு ஒரு வேலைக்காரர்.    அதனால் அவருடன் பேசுவதில் ஒரு பயனும் இல்லை.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தேவை இல்லாமல் பாகிஸ்தானுடன்  பேச்சு வார்த்தை நடத்தி தனது தெம்பை இழப்பது தேவையற்றது.  இந்தியா ஏதாவது சொன்னால் பாகிஸ்தானுக்கு பைத்தியம் பிடித்து விடும்.   ஆகையால் இந்தியா தனது ராணுவத்தை தயாராக வைத்துக் கொண்டு பாகிஸ்தானை 4 துண்டுகளாக பிளக்க வேண்டும்.

வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா தனது மக்களுக்கு இந்து கோவில்களை இடிக்கக்கூடாதுஎன சொல்லி திருத்த வேண்டும்.    வங்க தேசத்தினர் இந்து கோவில்களை மசூதிகளாக மாற்றுவதையும் இந்துக்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றுவதையும் அடியோடு நிறுத்த வேண்டும்.  வங்க தேசத்தில் இந்துக்கள் கொடுமை செய்வதை நிறுத்தவில்லை எனில் இந்திய ராணுவம் வங்க தெசத்தின் மீது படை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துவேன்” என கூறி உள்ளார்.