எம்எல்ஏ பதவி ராஜினாமா? கருணாஸ் அதிரடி அறிவிப்பு

புதுக்கோட்டை:

தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள வந்துள்ள புலிப்படை தலைவர் கருணாஸ், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறி உள்ளார்.

அரசுக்கும், எடப்பாடிக்கும் எதிராகவும், சசிகலாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்த கருணாஸ் 2 வழக்கு களில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில்  வெளியே இருக்கிறார். அவருக்கு  தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள  3 நாள் நிபந்தனையை தளர்வு செய்து எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இரடடை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாசின் பதவியை பறிக்க அதிமுக தயாராகி வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியளார்களை சந்தித்த கருணாஸ், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறி உள்ளார்.

எனக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா தான் இந்த வாய்ப்பைகொடுத்தார். நான் இரட்டை இலை  சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றிபெற்றேன்.  ஜெயலலிதாவின் ஆட்சி கவிழ்ந்து  விடக்கூடாது  என்ற உணர்வோடு இருந்தவன் நான்.

ஆனால்,  என் சமுதாயத்திற்காகவும், என் தொகுதி மக்களுக்காகவும் எந்த ஒரு சலுகையும்செய்யாத  இந்த  அரசில், எம்.எல்.ஏ.வாக தொடர நான் விரும்பவில்லை. எப்போதுவேண்டுமானாலும் எனது பதவியை ராஜினமா  செய்ய தயாராக இருக்கிறேன். நான்சம்பளத்திற்காக எம்.எல்.ஏ. பதவிக்கு வரவில்லை என்று கூறினார்.

மேலும்,  தனக்கு சபாநாயகரிடம் இருந்து இதுவரை எனக்கு எந்தவொரு கடிதமும் வரவில்லை. என்று கூறியவர்,  அப்படி வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றவர்,  தற்போதைய தமிழக சுயநலமான அரசு,  மக்களுக்கான அரசாக இல்லை.

இவ்வாறு கருணாஸ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.