நாளை சொல்கிறேன்!: உறுதி செய்தார் ரஜினி!

சென்னை:

“அரசியல் பிரவேசம் குறித்த எனது அறிவிப்புக்கு ஒரு நாள் பொறுத்திருங்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஐந்தவது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ஐந்தாவது நாளான இன்று  பேசிய ரஜினி, “தற்போது சென்னையாக மாறிவிட்டாலும் எனக்கு இது மெட்ராஸ் தான்” என்றார். மேலும், “கனவு காணும்போது இருக்கும் மகிழ்ச்சி, நனவாகும்போது இருக்காது” என்றார்.

இதன்பிறகு செய்தியாளர்கள்  ரஜினியிடம், அரசியல் அறிவிப்பு வருமா என்று கேட்டனர்.   அதற்கு, அவர் ஒரு நாள் பொறுத்திருங்கள் என ரஜினி பதில் அளித்தார்.

இதையடுத்து அரசியல் குறித்து நிச்சயமாக அவர்   நாளை அறிவிப்பு வெளியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.