தனக்கு கிடைத்துள்ள ஒரு வருடமும் திறம்பட செயல்படுவேன்! பொன்மாணிக்கவேல்

சென்னை:

னக்கு கிடைத்துள்ள ஒரு வருடமும் திறம்பட செயல்படுவேன் என்ற ஐ.ஜி. பொன்மாணிக்க வேல்,இனி எல்லா சிலைகளும் திரும்ப வரும் என்றும் கூறினார்.

மிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான புகார்களை விசாரித்து வந்த ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் இன்றுடன் ஒய்வுபெறுவதாக இந்த நிலையில், அவரை ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் ஐ.ஜி.பொன் மாணிக்க வேலை நியமித்து விசாரித்து வந்த நிலையில், வழக்கை  சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு  அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அரசின் சிபிஐ விசாரணை குறித்த அரசாணையை ரத்து செய்த உயர்நீதி மன்ற அமர்வு, ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு  அதிகாரியாக ஓராண்டு நீடித்தும், பொன்.மாணிக்கவேல் தான் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக இருப்பார்  என்றும் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தனக்கு கிடைத்துள்ள ஒரு வருடமும் திறம்பட செயல்படுவேன் என்று கூறினார்.

இந்த ஒரு வருடத்திற்குள்  சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை முடிக்க முயற்சிப்பேன்,  எனது கடமையை திறம்பட செய்வேன் என்றும் கூறினார். சிலை கடத்தல் வழக்குகளில் இதுவரை என்னுடன் இருந்த குழுவே தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றவர்,  எனது டீமிலிருந்து யாரையும் நகர்த்த விட மாட்டேன் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

இனி எல்லா சிலையும் திரும்ப வரும் என்றவர்… இது கடமை என்றும், இதற்காக சம்பளம் கூட தேவையில்லை… இனி சிலை திருடர்களை மொத்தமாக பிடிப்பதுதான் என் முதல் வேலையே என்றும் தெரிவித்தார்.

You may have missed