தேர்தலில் தோல்வி அடைய விருப்பம்…கமல்

சென்னை:

தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைய விரும்புகிறேன். ஆனால் ஒரு போதும் பணம் தரமாட்டேன் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மக்கள் நீதி மைய தலைவர் கமல் பேசுகையில், ‘‘தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய விரும்புகிறேன். வாக்காளர்களுக்கு ஒருபோதும் பணம் தரமாட்டேன்.

அரசியல் விளையாட்டல்ல. நான் என்ன செய்கிறேன் என்பதில் கவனமாக இருக்கிறேன். எனது சொந்தப் பணத்தில் கட்சியை நடத்தி வருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.