கட்சி தாவலை அனுமதிக்க மாட்டேன் : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

விஜயவாடா

ந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி தாவலை அனுமதிக்க  போவதில்லை என தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆந்திர சட்டப்பேரவையில்  ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் 23 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார்கள்.   அவர்களை ஏற்றுக் கொண்ட அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களில் நால்வருக்கு அமைச்சர் பதவி அளித்து கவுரவித்தார்.   இது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அப்போது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை தோற்கடித்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைத்துள்ள்து.    சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் முதல்வரும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி உரையாற்றினார்.  அப்போது அவர் சென்ற ஆட்சியில் நடந்தவைகளை நினைவு கூர்ந்தார்

ஜெகன்மோகன் ரெட்டி, “சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாராவது எங்கள் கட்சிக்கு வர விரும்பினால் அவர்கள் உறுப்பினர்  பதவியை ராஜினாமா செய்த பிறகே வரவேண்டும்.  எனது கட்சி தலைவர்களில் சிலர் நான் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து குறைந்தது 5 உறுப்பினர்களையாவது சேர்ந்த்துக் கொண்டு தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைப்பதை தடுக்க வேண்டும் என கூறினார்கள்.

நான் அதை ஒப்புக் கொள்ளவில்லை.  அது எனது கொள்கைக்கு எதிரானது. சென்ற முறை எங்கள் கட்சியில் இருந்து 23 பேர் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார்கள்.   அதை நாயுடு அங்கீகரித்து அவர்களில் நால்வருக்கு அமைச்சர் பதவி அளித்தார். அது குறித்து அப்போதைய சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் எதிர்க்கட்சிகளின் உரிமையை பறித்து ஜனநாயகத்தை கொலை செய்தார்.

இப்போது சட்டப்பேரவையில் அதுபோல கட்சி தாவல் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்.   எங்கள் கட்சியில் இணைய விரும்பும் எந்த உறுப்பினரும் அந்த பதவியை ராஜினாமா செய்த பிறகே இணைய வேண்டும்.   அப்படி இல்லை எனில் அவர் மீது சபாநாயகர் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தண்டனை அளிப்பார்.   ஆந்திர சட்டப்பேர்வை  நாட்டுக்கே ஒரு உதாரணமாக இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என தனது உரையில் தெரிவித்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Andhra Assembly, CM jaganmohan reddy, Defections
-=-