ண்டன்

ங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் வரை ரகுராம் ராஜன் பதவி வகித்து வந்தார்.   பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன் கடந்த 2007-08 ஆம் வருடம் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியை சாமர்த்தியமாக சமாளித்து பல ஆலோசனைகளை அளித்துள்ளார். அவர் தனது பதவியை 2016ஆம் வருடம் ராஜினாமா செய்தார்.

தற்போது இங்கிலாந்து வங்கியின் தலைமை பொறுப்பில் இருக்கும் மார்க் கார்னியின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் அந்தப் பதவிக்கு அடுத்து வருபவர் யார் என பலரின் பெயர்களில்  ஊகங்கள் எழுந்துள்ளன.   இதில் ரகுராம் ராஜனும் ஒருவர் ஆவார்.  இவரைத் தவிர இங்கிலாந்து வங்கியின் முன்னாள் நிதி ஆலோசகர் ஆண்ட்ரூ பெய்லி, மெக்சிகோ வங்கியின் அகஸ்டின் கார்ஸ்டென்ஸ் ஆகியோரின் பெயரும் ஊகத்தில் உள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பல்கலைக் கழகத்தில் பணி புரிந்து வருகிறார்.   அவர், “நான் இப்போது உள்ள பணியில் நிம்மதியாக இருக்கிறேன்.  நான் அடிப்படையில் ஒரு கல்வியாளர், வங்கி பணியாளர் அல்ல.  அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்.   மேலும் நான் இங்கிலாந்து வங்கி ஆளுநர் பதவிக்கு  விண்ணப்பிக்க போவதும் இல்லை” எனக் கூறி உள்ளார்.