ரூ. 15 லட்சம் தருவதாக பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன் : ராகுல் காந்தி

--

துர்காப்பூர்

பொதுமக்களுக்கு ரூ. 15 லட்சம் தருவதாக மோடியைப் போல் பொய் வாக்குறுதி தர மாட்டேன் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.   தொடர்ந்து பல பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றி வருகிறார்.  அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துர்காப்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் நேற்று ராகுல் காந்தி உரையாற்றினார்.

தனது உரையில் ராகுல் காந்தி, “கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிவெளிநாட்டில் பதிக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு வந்து மக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக வாக்களித்தார்.   ஆனால் இன்று வரை அவ்வாறு செய்யவில்லை.  நான் அதைப் போல பொய் வாக்குறுதிகள் தர மாட்டேன்.

அடித்தபடியாக உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களையும் தயாரிக்கும் மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்தார்.   அதற்கு பிறகும் இந்தியாவில் உள்ள அனைத்து பொருட்களும் சீன தயாரிப்பாகவே உள்ளன.   இதனால் சீனா நாள் ஒன்றுக்கு 50000  வேலை வாய்ப்பை உருவாக்குகிறது.    அதே நேரத்தில் இந்தியாவில் ஒரு நாளைக்கு 450 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகிறது.   இந்த விஷயத்திலும் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக பொய் கூறினார்” என தெரிவித்தார்.